தங்கம் விலை கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து விலை ஏற்ற-இறக்கத்துடனேயே நீடித்து வருகிறது.
கடந்த சில நாட்களாக பெரிய அளவில் உயர்வு இல்லாமல் இருந்த நிலையில், நேற்று முன்தினம் ரூ.380 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 50-க்கும், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 40-ம் அதிரடியாக உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 400-க்கும் விற்பனையானது.
நேற்று கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் குறைந்தது. பின்னர் மாலையில் கூடுதலாக கிராமுக்கு ரூ.200-ம், சவரனுக்கு ரூ.1,600-ம் சரிந்தது. ஆக நேற்று மட்டும் மொத்தம் கிராமுக்கு ரூ.300-ம், சவரனுக்கு ரூ.2 ஆயிரத்து 400-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 750-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,10,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.13,850-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
2-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,000
1-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400
31-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,360
30-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,160
29-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280
2-04-2026- ஒரு கிராம் ரூ.255
1-04-2026- ஒரு கிராம் ரூ.265
31-03-2026- ஒரு கிராம் ரூ.250
30-03-2026- ஒரு கிராம் ரூ.255
29-03-2026- ஒரு கிராம் ரூ.250