தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

தங்கத்தின் விலை குறைவதும், உயருவதுமாக இருந்து வருகிறது. சென்னையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்றது. நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 உயர்ந்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 230-க்கும், பவுனுக்கு ரூ.240 அதிகரித்து ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 840-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,040 குறைந்து ரூ.1,12,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.160 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.265-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 65 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

26-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

25-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

24-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

23-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,280

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

27-04-2026- ஒரு கிராம் ரூ.270

26-04-2026- ஒரு கிராம் ரூ.270

25-04-2026- ஒரு கிராம் ரூ.270

24-04-2026- ஒரு கிராம் ரூ.265

23-04-2026- ஒரு கிராம் ரூ.270