தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | ஏறிய வேகத்தில் இறங்கிய தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,18,240-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,780-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் தங்கம் விலை ஏறிய வேகத்தில் இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

25-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240

24-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

23-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840

22-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240

21-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,480

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

25-05-2026- ஒரு கிராம் ரூ.295

24-05-2026- ஒரு கிராம் ரூ.295

23-05-2026- ஒரு கிராம் ரூ.295

22-05-2026- ஒரு கிராம் ரூ.295

21-05-2026- ஒரு கிராம் ரூ.290