தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது.
தங்கம் விலை கடந்த 22-ந்தேதி சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கும், கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கும் விற்பனையானது. 23-ந்தேதி சவரனுக்கு ரூ.400 குறைந்து ரூ.1,17,840-க்கும், கிராமுக்கு ரூ.50 குறைந்து ரூ.14,730-க்கு விற்பனையானது. நேற்று ஒரு சவரன் ரூ.1,17,840-க்கும், ஒரு கிராம் ரூ.14,730-க்கு விற்பனையானது.
இந்நிலையில் வாரத்தின் முதல் நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,18,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.
24-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840
23-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,840
22-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,240
21-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,480
20-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000
24-05-2026- ஒரு கிராம் ரூ.295
23-05-2026- ஒரு கிராம் ரூ.295
22-05-2026- ஒரு கிராம் ரூ.295
21-05-2026- ஒரு கிராம் ரூ.290
20-05-2026- ஒரு கிராம் ரூ.285