தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | மீண்டும் உயர்ந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது.

தங்கம் விலை கடந்த 19-ந்தேதி வரை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்த நிலையில், கடந்த 20-ந்தேதிக்கு பிறகு விலை படிப்படியாக குறைந்து கொண்டே வந்தது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 75-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.55-ம், சவரனுக்கு ரூ.440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 20-க்கும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 160-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 உயர்ந்து ரூ.1,13,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 உயர்ந்து ரூ.14,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

24-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

23-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,280

22-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,000

21-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400

20-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

24-04-2026- ஒரு கிராம் ரூ.265

23-04-2026- ஒரு கிராம் ரூ.270

22-04-2026- ஒரு கிராம் ரூ.275

21-04-2026- ஒரு கிராம் ரூ.275

20-04-2026- ஒரு கிராம் ரூ.280