தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது.

தங்கம் விலை ஒரு நாள் ஏறுவதும், மறுநாள் இறங்குவதும் என கண்ணாமூச்சி காட்டி வருகிறது.

தங்கம் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 750-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் விற்பனையானது. நேற்று ரூ.60 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 810-க்கும், ரூ.480 உயர்ந்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 480-க்கும் விற்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.240 குறைந்து ரூ.1,18,240-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.30 குறைந்து ரூ.14,780-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை இன்று அதிகரித்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.295-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 95 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,480

20-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

19-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,960

18-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

17-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

21-05-2026- ஒரு கிராம் ரூ.290

20-05-2026- ஒரு கிராம் ரூ.285

19-05-2026- ஒரு கிராம் ரூ.300

18-05-2026- ஒரு கிராம் ரூ.300

17-05-2026- ஒரு கிராம் ரூ.290