தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: மீண்டும் ரூ.1 லட்சத்தை நெருங்கும் தங்கம்... புதிய உச்சத்தில் வெள்ளி - இன்றைய நிலவரம்

வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்துள்ளது.வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாக ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. அந்தவகையில் நேற்று முன்தினம் தங்கம் விலை உயர்ந்து, ஒரு கிராம் ரூ.12,400-க்கும், ஒரு சவரன் ரூ.99,200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றும் ஒரு சவரன் ரூ.99,200-க்கு விற்பனை செய்யப்பட்டது.

இந்த நிலையில் வார தொடக்க நாளான இன்று தங்கம் விலை உயர்ந்து மீண்டும் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை நெருங்கி உள்ளது. தங்கம் விலை கிராமுக்கு 80 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் ரூ.12,480-க்கும் சவரனுக்கு 640 ரூபாய் உயர்ந்து ஒரு சவரன் ரூ.99,840-க்கும் விற்பனையாகிறது.

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை எட்டி உள்ளது.

வெள்ளி விலை கிராமுக்கு 5 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி 231 ரூபாய்க்கும் பார் வெள்ளி 2 லட்சத்து 31 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

21-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

20-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

19-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,040

18-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,520

17-12-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.99,200

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

21-12-2025- ஒரு கிராம் ரூ.226

20-12-2025- ஒரு கிராம் ரூ.226

19-12-2025- ஒரு கிராம் ரூ.221

18-12-2025- ஒரு கிராம் ரூ.224

17-12-2025- ஒரு கிராம் ரூ.222