தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | தங்கம், வெள்ளி விலை... இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.

அட்சய திருதியையொட்டி நேற்று முன்தினம் தமிழகத்தில் நகைக்கடைகளில் தங்கத்தின் விற்பனை அமோகமாக இருந்தது. தொடர்ந்து நேற்றும் நகைக்கடைகளில் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. மேலும் தங்கத்தின் விலையும் நேற்று சற்று குறைந்திருந்தது.

சென்னையில் நேற்று தங்கம் விலை கிராமுக்கு ரூ.60 குறைந்து ரூ.14,300-க்கும், சவரனுக்கு ரூ.480 குறைந்து ரூ.1,14,400-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு கிராம் ரூ.14,300-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,400-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

20-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,400

19-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

18-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

17-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,680

16-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

20-04-2026- ஒரு கிராம் ரூ.280

19-04-2026- ஒரு கிராம் ரூ.280

18-04-2026- ஒரு கிராம் ரூ.280

17-04-2026- ஒரு கிராம் ரூ.275

16-04-2026- ஒரு கிராம் ரூ.275