தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | மீண்டும் குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

வெள்ளி விலை இன்று அதிரடியாக குறைந்து உள்ளது.

தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே ஏற்றம்-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 16-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 750-க்கும், பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்துக்கும் விற்பனையானது. இது 18-ந்தேதி வரையிலும் எந்தவித மாற்றமும் இன்றி தொடர்ந்தது. நேற்று ரூ.120 உயர்ந்து கிராம் ரூ.14 ஆயிரத்து 870-க்கும், ரூ.960 உயர்ந்து பவுன் ரூ.1 லட்சத்து 18 ஆயிரத்து 960-க்கும் விற்பனையானது.

கடந்த 10-ந்தேதி தங்கம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 150-க்கும். பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 200-க்கும் விற்பனையாகியது. கடந்த 10 நாட்களில் மட்டும் கிராமுக்கு ரூ.720-ம், சவரனுக்கு ரூ.5 ஆயிரத்து 760-ம் உயர்ந்திருக்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.960 குறைந்து ரூ.1,18,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.120 குறைந்து ரூ.14,750-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்து உள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.15 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.285-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 85 ஆயிரத்திற்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

19-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,960

18-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

17-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

16-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,000

15-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,120

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

19-05-2026- ஒரு கிராம் ரூ.300

18-05-2026- ஒரு கிராம் ரூ.300

17-05-2026- ஒரு கிராம் ரூ.290

16-05-2026- ஒரு கிராம் ரூ.290

15-05-2026- ஒரு கிராம் ரூ.305