போர்ச்சூழல் ஏற்படும் போதெல்லாம் தங்கம் விலை தாறுமாறாக எகிறும். ஆனால் அமெரிக்கா-ஈரான் இடையே போர் உச்சத்தில் இருக்கும் சூழலிலும் தங்கம் விலை தொடர்ந்து இறங்குமுகத்தில் இருப்பதை கடந்த ஒரு வாரத்துக்கு மேலாக பார்க்க முடிகிறது.
கடந்த 12-ந்தேதி தங்கம் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து, ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 20 ஆயிரத்துக்கு கீழ் வந்தது. அதன் பின்னர் தொடர்ந்து விலை சரிந்து கொண்டே வந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 570-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்து 560-க்கும் விற்பனை ஆனது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.270-ம், சவரனுக்கு ரூ.2,160-ம் குறைந்து இருந்தது. மீண்டும் பிற்பகலில் கூடுதலாக கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் என ஒரே நாளில் கிராமுக்கு ரூ.670-ம், சவரனுக்கு ரூ.5,360-ம் அதிரடியாக சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 900-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 200-க்கும் விற்பனை செய்யப்பட்டது. கடந்த 8 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.1,220-ம், சவரனுக்கு ரூ.9,760-ம் குறைந்துள்ளது.
தொடர்ந்து இறங்குமுகத்தில் இருந்த தங்கம் விலை இன்று சற்றே விலை உயர்ந்துள்ளது. சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,11,600-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை உயர்ந்த நிலையில் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:
19-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200
18-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,560
17-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,200
16-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,680
15-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,18,080
கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:
19-03-2026- ஒரு கிராம் ரூ.265
18-03-2026- ஒரு கிராம் ரூ.275
17-03-2026- ஒரு கிராம் ரூ.280
16-03-2026- ஒரு கிராம் ரூ.276
15-03-2026- ஒரு கிராம் ரூ.280