தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY : தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்

பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கம், வெள்ளி விலை கடந்த சில மாதங்களாக ஏற்ற, இறக்கத்துடனேயே நீடிக்கிறது. ஓரிரு நாட்கள் விலை ஏறுவதும், பின்னர் சரிவதுமான நிலையிலேயே பயணித்து கொண்டிருக்கிறது.

அந்த வகையில் கடந்த வாரம் முழுவதும் ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வருகிறது.

நேற்று தங்கம் விலை அதிரடியாக குறைந்தது. கிராமுக்கு 130 ரூபாய் குறைந்து கிராம் 14,500 ரூபாய்க்கும், சவரனுக்கு 1040 ரூபாய் குறைந்து ஒரு சவரன் ஒரு லட்சத்து 16ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலையில் இன்று மாற்றம் இல்லை. தங்கம் விலை ஒரு சவரன் ரூ.1,16,000-க்கும், ஒரு கிராம் ரூ.14,500-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையிலும் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.290-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 90 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

1-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

31-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040

30-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,17,040

29-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,800

28-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,16,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

1-06-2026- ஒரு கிராம் ரூ.290

31-05-2026- ஒரு கிராம் ரூ.290

30-05-2026- ஒரு கிராம் ரூ.290

29-05-2026- ஒரு கிராம் ரூ.290

28-05-2026- ஒரு கிராம் ரூ.285