தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | மீண்டும் விலை உயர்ந்த தங்கம், வெள்ளி - எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கு விற்பனையாகிறது.

தங்கம் விலை மீண்டும் ஏற்ற-இறக்கத்துடன் நீடிக்கிறது. கடந்த மாதம் ஏப். 29-ந் தேதி விலை குறைந்து, நேற்று முன்தினம் விலை உயர்ந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று விலை குறைந்து காணப்பட்டது. நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 100-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 800-க்கும் விற்கப்பட்டது. நேற்று காலை நேர நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் குறைந்து இருந்தது. இதனைத்தொடர்ந்து நேற்று மாலையில் மேலும் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் சரிந்தது. ஆக நேற்று ஒரே நாளில் 2 முறை இறக்கம் கண்டது. மொத்தம் கிராமுக்கு ரூ.180-ம், சவரனுக்கு ரூ.1,440-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 920-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 11 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.640 உயர்ந்து ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.80 உயர்ந்து ரூ.14,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 உயர்ந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.270-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 70 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

1-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,360

30-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

29-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,11,200

28-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

27-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,840

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

1-05-2026- ஒரு கிராம் ரூ.265

30-04-2026- ஒரு கிராம் ரூ.270

29-04-2026- ஒரு கிராம் ரூ.260

28-04-2026- ஒரு கிராம் ரூ.265

27-04-2026- ஒரு கிராம் ரூ.270