தங்கம் விலை கடந்த ஒரு வாரமாக ஏற்ற-இறக்கத்துடன் காணப்படுகிறது. கடந்த 25-ந்தேதி உயர்ந்த நிலையில், அதற்கு அடுத்த நாள் விலை குறைந்து, பின்னர் தொடர்ச்சியாக அதிகரித்து கொண்டே வந்தது. நேற்று முன்தினம் சற்று விலை குறைந்து காணப்பட்ட நிலையில் நேற்று மீண்டும் விலை எகிறியது.
அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 670-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 9 ஆயிரத்து 360-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.380-ம், சவரனுக்கு ரூ.3 ஆயிரத்து 40-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 50-க்கும், ஒரு சவரன் ரூ. 1 லட்சத்து 12 ஆயிரத்து 400-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,11,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.13,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
1-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,400
31-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,360
30-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,160
29-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280
28-03-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,09,280
1-04-2026- ஒரு கிராம் ரூ.265
31-03-2026- ஒரு கிராம் ரூ.250
30-03-2026- ஒரு கிராம் ரூ.255
29-03-2026- ஒரு கிராம் ரூ.250
28-03-2026- ஒரு கிராம் ரூ.250