தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | நெருங்கி வரும் அட்சய திருதியை... அதிரடியாக குறைந்த தங்கம் விலை - எவ்வளவு தெரியுமா?

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது.

அந்த வகையில் நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.100-ம், சவரனுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14,320-க்கும், ஒரு சவரன் ரூ.1,14,560-க்கும் விற்பனையானது. நேற்று தங்கம் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.1,200 குறைந்து ரூ.1,13,680-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.150 குறைந்து ரூ.14,210-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

16-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,880

15-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560

14-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760

13-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480

12-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

16-04-2026- ஒரு கிராம் ரூ.275

15-04-2026- ஒரு கிராம் ரூ.275

14-04-2026- ஒரு கிராம் ரூ.265

13-04-2026- ஒரு கிராம் ரூ.260

12-04-2026- ஒரு கிராம் ரூ.265