தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: சற்றே குறைந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

சென்னையில் கடந்த சில தினங்களாக தங்கம் விலை இறங்குமுகத்தில் இருந்து வந்தது. அந்த வகையில் நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 860-க்கும், சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 880-க்கும் விற்பனையானது.

தங்கம் விலை உயர்வு

நேற்று தங்கம் விலை மீண்டும் ஏற்றம் கண்டது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.210 அதிகரித்து ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், சவரனுக்கு ரூ.1,680 அதிகரித்து ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது.

இன்றைய தங்கம் விலை

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலை குறைவு

தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

15-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560

14-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

13-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,880

12-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

11-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,08,000

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

15-06-2026- ஒரு கிராம் ரூ.280

14-06-2026- ஒரு கிராம் ரூ.270

13-06-2026- ஒரு கிராம் ரூ.270

12-06-2026- ஒரு கிராம் ரூ.265

11-06-2026- ஒரு கிராம் ரூ.260