தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் நீடித்து வந்த நிலையில், கடந்த சில நாட்களாக விலை ஏறுமுகத்தில் இருப்பதை பார்க்க முடிகிறது. அந்த வகையில் நேற்றும் தங்கம் விலை உயர்ந்து இருந்தது.
நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 220-க்கும், ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 760-க்கும் விற்பனையானது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.100-ம், பவு னுக்கு ரூ.800-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 320-க்கும். ஒரு பவுன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.1,14,880-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.14,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.275-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 75 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
15-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,560
14-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,760
13-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,480
12-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
11-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
15-04-2026- ஒரு கிராம் ரூ.275
14-04-2026- ஒரு கிராம் ரூ.265
13-04-2026- ஒரு கிராம் ரூ.260
12-04-2026- ஒரு கிராம் ரூ.265
11-04-2026- ஒரு கிராம் ரூ.265