தங்கம், வெள்ளி மீதான இறக்குமதி வரியை 6 சதவீத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தி உள்ளது. இதன் தாக்கம் தங்கம், வெள்ளி மீதான விலையிலும் எதிரொலித்தது.
கடந்த 12-ந்தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 330-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 14 ஆயிரத்து 640-க்கும் விற்பனையானது. நேற்று முன்தினம் ஒரே நாளில் சவரனுக்கு ரூ.8,560 உயர்ந்தது. கிராமுக்கு ரூ.1,070 உயர்ந்து ஒரு கிராம் ரூ.15 ஆயிரத்து 400-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 23 ஆயிரத்து 200-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.1,20,400-க்கும், கிராமுக்கு ரூ.50 உயர்ந்து ரூ.15,050-க்கு விற்பனையானது.
இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.800 குறைந்து ரூ.1,19,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.100 குறைந்து ரூ.14,950-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தை போல வெள்ளி விலையும் இன்று அதிரடியாக குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.305-க்கும், பார் வெள்ளி 3 லட்சத்து 5 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
14-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,400
13-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,20,000
12-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,14,640
11-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800
10-05-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,200
14-05-2026- ஒரு கிராம் ரூ.315
13-05-2026- ஒரு கிராம் ரூ.320
12-05-2026- ஒரு கிராம் ரூ.300
11-05-2026- ஒரு கிராம் ரூ.285
10-05-2026- ஒரு கிராம் ரூ.280