தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY | வார தொடக்கத்தில் குட் நியூஸ்.. தங்கம் விலை சரிவு - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலையில் ஏற்ற, இறக்கம் தொடர்ந்து நீடிக்கிறது. அதன்படி, கடந்த 5-ந்தேதியில் இருந்து ஒருநாள் விலை ஏறுவதும், மறுநாள் விலை குறைவதுமாக இருக்கிறது. இதன் தொடர்ச்சியாக கடந்த 9-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்துக்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 10-ந்தேதி கிராமுக்கு ரூ.125-ம், சவரனுக்கு ரூ.1,000-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 125-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்துக்கும் விற்பனையானது. 11-ந்தேதி சவரனுக்கு ரூ.200 குறைந்து ரூ.1,12,800-க்கும், கிராமுக்கு ரூ.25 குறைந்து ரூ.14,100-க்கு விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.320 குறைந்து ரூ.1,12,480-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.40 குறைந்து ரூ.14,060-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.5 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

12-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

11-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,800

10-4-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,000

09-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,000

08-04-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

12-04-2026- ஒரு கிராம் ரூ.265

11-04-2026- ஒரு கிராம் ரூ.265

10-04-2026- ஒரு கிராம் ரூ.265

09-04-2026- ஒரு கிராம் ரூ.260

08-04-2026- ஒரு கிராம் ரூ.265