தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: தங்கம் வாங்க சரியான நேரம்... தொடர்ந்து விலை சரிவில் தங்கம் - இன்றைய நிலவரம்

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை.

தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரையில் ஏற்ற-இறக்கத்துடன் நீடித்தது. அதன் பின்னர் இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர்ந்து சரிவை சந்திக்க தொடங்கியது.

இது கடந்த 8-ந்தேதி வரை தொடர்ந்து குறைந்து கொண்டே வந்தது. திடீரென்று நேற்று முன்தினம் கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் அதிகரித்தது. மீண்டும் ஏறுமுகத்தில் இருக்குமோ? என நினைத்த நேரத்தில் நேற்று அதிரடியாக சரிந்து காணப்பட்டது.

அதன்படி, நேற்று முன்தினம் ஒரு கிராம் தங்கம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை செய்யப்பட்டது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.400-ம், சவரனுக்கு ரூ.3,200-ம் சரிந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 800-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 10 ஆயிரத்து 400-க்கும் விற்பனை ஆனது.

தங்கம் விலை வீழ்ச்சி

அமெரிக்க டாலரின் மதிப்பு உலக சந்தையில் தொடர்ந்து வலுவடைந்து வருகிறது. சர்வதேச சந்தையில் தங்கத்தை டாலரிலேயே வாங்குகிறார்கள். இதர நாட்டு பண மதிப்பில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வது அதிக செலவை ஏற்படுத்தும் என கருதி முதலீட்டை குறைத்துள்ளனர். இது உலகளவில் தேவையை குறைத்து விலையையும் சரிய வைத்திருக்கிறது. நகை மீதான ஆர்வலர்களுக்கும். சுபகாரியங்களுக்காக நகை எடுக்க காத்திருப்பவர்களுக்கும் இந்த விலை வீழ்ச்சி ஒரு நல்ல வாய்ப்பாகவே பார்க்கப்படுகிறது.

தங்கம் விலை இன்றைய நிலவரம்

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,400 குறைந்து ரூ.1,08,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.300 குறைந்து ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு சவரன் தங்கம் கடந்த 2 நாட்களில் மட்டும் ரூ.5,600 குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

வெள்ளி விலை

வெள்ளி விலையில் இன்று மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

10-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,10,400

09-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

08-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560

07-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

06-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

10-06-2026- ஒரு கிராம் ரூ.260

09-06-2026- ஒரு கிராம் ரூ.270

08-06-2026- ஒரு கிராம் ரூ.270

07-06-2026- ஒரு கிராம் ரூ.270

06-06-2026- ஒரு கிராம் ரூ.280