தமிழக செய்திகள்

GOLD PRICE TODAY: அதிரடியாக குறைந்த தங்கம், வெள்ளி விலை - இன்றைய நிலவரம்

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது.

தங்கம் விலை கடந்த மாதம் (மே) இறுதி வரை ஏற்ற-இறக்கத்துடன் பயணித்தது. இப்படியாக இருந்த தங்கம் விலை இம்மாத தொடக்கத்தில் இருந்து தொடர் சரிவை சந்தித்து வருவதை பார்க்க முடிகிறது.

அதன்படி, கடந்த 7-ந்தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 200-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 600-க்கும் விற்பனை ஆனது. 8-ந்தேதி கிராமுக்கு ரூ.130-ம், சவரனுக்கு ரூ.1,040-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 70-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 560-க்கும் விற்பனையானது. நேற்று சவரனுக்கு ரூ.1,040 உயர்ந்து ரூ.1,13,600-க்கும், கிராமுக்கு ரூ.130 உயர்ந்து ரூ.14,200-க்கும் விற்பனையானது.

இந்நிலையில் சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.3,200 குறைந்து ரூ.1,10,400-க்கு விற்பனை செய்யப்படுகிறது. தங்கம் விலை கிராமுக்கு ரூ.400 குறைந்து ரூ.13,800-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

தங்கத்தை போன்று வெள்ளி விலையும் இன்று குறைந்துள்ளது. வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.260-க்கும், பார் வெள்ளி 2 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

09-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

08-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,12,560

07-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

06-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,13,600

05-06-2026- ஒரு பவுன் (22 காரட்) ரூ.1,15,440

கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

09-06-2026- ஒரு கிராம் ரூ.270

08-06-2026- ஒரு கிராம் ரூ.270

07-06-2026- ஒரு கிராம் ரூ.270

06-06-2026- ஒரு கிராம் ரூ.280

05-06-2026- ஒரு கிராம் ரூ.280