மதுரையில் அமைச்சர் நிர்மல்குமார் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை தொடங்கி வைக்க 28ம் தேதி மதுரை வரும் முதலமைச்சர் விஜய், காந்தி மியூசியத்தை திறந்து வைக்கிறார்.
வீரமணியை காப்பாற்றும் வேலையில் இப்போதும் திமுக ஈடுபடுகிறது. 2024ம் ஆண்டில் புகார் கிடைத்தும் வீரமணி மீது வழக்குப்பதிவு செய்யாதது ஏன்? திமுக ஆட்சி காலத்தில் மூடி மறைக்கப்பட்ட வழக்குகள் எத்தனை?
வீடியோ ஷேடோவாக இருந்தது, போதிய ஆதாரம் இல்லாததால் வழக்கை மூடியதாக ரகுபதி கூறுகிறார்.
வீரமணி வழக்கில் திமுக ஓவர் ரியாக்ட் செய்கிறது. திமுக ஆட்சியின்போது ஜெம் வீரமணி வழக்கில் எஸ்ஐடி அமைக்காதது ஏன்?
ஜெம் வீரமணி விவகாரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக கட்டப்பஞ்சாயத்து நடந்துள்ளது.
வீரமணி வழக்கு நடந்த நேரத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் என்ன செய்து கொண்டிருந்தார். மு.க.ஸ்டாலினுக்கு தெரிந்தும் அவர் அமைதியாக இருந்தாரா? வீரமணி வழக்கில் போலீசார் சம்பந்தப்பட்டபோது, துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் என்ன செய்தார்?
வீரமணி குப்பனோ சுப்பனோ அல்ல, பாலியல் வன்கொடுமை குறித்து உளவுத்துறை சொல்லியும் நடவடிக்கை எடுக்காதது ஏன்?
வழக்கு தொடர்பாக பல பேர் பேரம் பேசி வீரமணியிடம் பணம் பறித்ததாக தொடர்ந்து செய்திகள் வெளி வருகின்றன.
வீரமணி வழக்கில் சம்பந்தப்பட்ட அனைவரும் தண்டிக்கப்படுவார்கள். ஒருவரும் தப்பிக்க முடியாது. வீரமணி வழக்கில் மீது யார் மீது ஆதாரம் உள்ளதோ. யார் பணம் பறித்தார்களோ அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்திரகை செய்தி அடிப்படையில் பெ.சண்முகம் நேற்று பேசியுள்ளார். இன்று விளக்கம் அளிப்பதாக கூறியுள்ளார்.
அதிமுக எம்எல்ஏக்கள் அக்கட்சியிலிருந்து எதற்காக வெளியே வந்தனர் என அனைவரும் அறிந்துள்ளனர். இபிஎஸ் சுயநலம் காரணமாக அதிமுகவில் இருந்து தலைவர்கள் வெளியேறுகிறார்கள்.
தற்போது உள்ளது எடப்பாடியின் அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா வளர்த்த அதிமுக இல்லை.
எடப்பாடியின் சொத்துகளை காப்பாற்றுவதற்காகவே அவருடன் இன்னும் சிலர் ஒட்டிக்கொண்டுள்ளனர். இன்றைக்கு அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இன்னும் 2 ஆண்டுகளில் திமுகவுக்கு ஏற்படும்.
அரசியல் எதிர்காலமே இல்லாததால் திமுக, அதிமுகவில் யாரும் பயணிக்க விரும்பவில்லை.
அண்ணா தொடங்கி கலைஞர் வளர்த்த திமுக தற்போது ஸ்டாலினையும் உதயநிதியையும் நம்ப முடியாத நிலையில் உள்ளது.
தமிழகத்திற்கு தேவைப்படும் நேரத்தில் முதல் ஆளாக பாஜகவை தவெக எதிர்க்கும்.
பாஜகவை கொள்கை எதிரியாக கூறி கட்சி தொடங்கிய தவெக தற்போது வரை அதே நிலைப்பாட்டில் உள்ளது.
தவெகவினர் யாருமே எந்த பவர் சென்டரும் வைத்திருக்கவில்லை, ஈகோவில் தான் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் பேசுகிறார். பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் இன்னும் எத்தனை நாட்கள் அப்பா, தாத்தா என பேசிக்கொண்டிருப்பார் என தெரியவில்லை.
திமுக ஆட்சியில் நிதியமைச்சராக நியமிக்கப்பட்டபோதே அதற்கு சரிவரமாட்டார் என நீக்கப்பட்டவர் பழனிவேல் தியாகராஜன்.
இவ்வாறு அவர் கூறினார்.