தமிழ்நாடு செய்திகள்

அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவு- போக்குவரத்துத்துறை

பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

மாலை மலர்

சென்னை:

போக்குவரத்துத்துறை அரசு பேருந்து ஓட்டுநர்களுக்கு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:

* பேருந்தை சாலையின் நடுவில் பிற வாகனங்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் நிறுத்தக்கூடாது.

* பேருந்து நிறுத்தத்தை விட்டு பேருந்தை தள்ளி நிறுத்துவதால், பயணிகள் கீழே விழுந்து காயம் ஏற்படும் சூழ்நிலையும் சில நேரங்களில் மரண விபத்தும் ஏற்பட ஏதுவாகிறது.

* அனைத்து ஓட்டுநர், நடத்துநர்களும் உரிய பேருந்து நிறுத்தத்தில் பயணிகளை ஏற்றி, இறக்கிவிட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.