தமிழக செய்திகள்

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழகம் புதிய சாதனை - ரூ.50,000 கோடி முதலீடு ஈர்ப்பு

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்தது மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுப்படி தெரிய வந்துள்ளது.

முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்தது மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுப்படி தெரிய வந்துள்ளது.

2026-27-ம் நிதியாண்டின் முதல் காலாண்டில் நாட்டிலேயே அதிக அன்னிய முதலீட்டை ஈர்த்த மாநிலமாக தமிழ்நாடு புதிய சாதனை படைத்துள்ளது.

ஏப்ரல் முதல் ஜூன் வரை ரூ.50,000 கோடி (5.95 பில்லியன் அமெரிக்க டாலர்) அன்னிய நேரடி முதலீட்டை தமிழ்நாடு ஈர்த்துள்ளது. முதலீடுகளை ஈர்ப்பதில் தமிழ்நாடு சாதனை படைத்தது மத்திய தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தரவுப்படி தெரிய வந்துள்ளது.

தமிழ்நாடு 2025-26-ம் நிதியாண்டில் 2.7 பில்லியன் டாலர் அன்னிய முதலீடு ஈர்ப்பானது நடப்பு நிதியாண்டில் இருமடங்காக உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டிற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிரா 4.22 பில்லியன் டாலர், டெல்லி 2.67 பில்லியன் டாலர், கர்நாடகா 2.11 பில்லியன் டாலர், குஜராத் 1.30 பில்லியன் டாலர் அன்னிய முதலீடுகளை ஈர்த்துள்ளன.

SCROLL FOR NEXT