தமிழக செய்திகள்

தலைமைச் செயலக ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமல்

இந்த உத்தரவு கடந்த ஆட்சிக் காலத்திலேயே பிறப்பிக்கப்பட்டது.

சென்னை ஜார்ஜ் கோட்டையில் தமிழ்நாடு அரசு தலைமைச் செயலகம் அமைந்துள்ளது.

இங்கு செயல்பட்டு வரும் மனிதவள மேலாண்மைத்துறை ஊழியர்களுக்கு பயோமெட்ரிக் வருகை பதிவேட்டு முறை இன்று (ஜூன் 1) முதல் அமலாகி உள்ளது.

இதன்படி இந்த துறையின் அலுவலர்கள் மற்றும் அதிகாரிகள் காலை 10 மணிக்கு அலுவலகத்துக்கு வந்து பயோமெட்ரிக் முறையில் தங்கள் வருகையை பதிவு செய்ய வேண்டும்.

இந்த உத்தரவு கடந்த ஆட்சிக் காலத்திலேயே பிறப்பிக்கப்பட்டது. ஆனால் இதற்கு அரசு ஊழியர் சங்கங்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

எனவே அதை கடந்த ஆட்சியில் நடைமுறைப்படுத்தாமல் விட்டுவிட்டனர். இந்நிலையில் தற்போது அமைந்துள்ள அரசு இதை கட்டாயமாகியுள்ளது.