தமிழக செய்திகள்

TN Election 2026 | 21 தொதிகளில் நேருக்கு நேர் மோதும் திமுக, அதிமுக கூட்டணி கட்சிகள்

தேமுதிக- பாமக நேருக்குநேராக 4 தொகுதிகளில் களம் காண்கின்றன.

தமிழக சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு 23-ந்தேதி நடைபெற இருக்கிறது. தற்போது வேட்புமனு தாக்கல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 234 தொகுதிகளில் 121 தொகுதிகளில் திமுக- அதிமுக இடையே நேரடி போட்டி நிலவுகிறது.

கூட்டணி கட்சிகளுடன் சேர்ந்து திமுக-வின் உதயசூரியன் 175 இடங்களில் நிற்கிறது. அதிமுக-வின் இரட்டை இலை சின்னர் 169 இடங்களில் போட்டியிடுகிறது.

இந்த நிலையில் அதிமுக மற்றும் திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் 21 இடங்களில் நேருக்குநேர் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்- பாமக சோழிங்கர், பென்னாகரம், மயிலாடுதுறை ஆகிய 3 தொகுதிகளில் நேருக்குநேர் சந்திக்கின்றன.

தேமுதிக- பாமக தருமபுரி, போளுர், சேலம் (மேற்கு), விருத்தாச்சலம் ஆகிய 4 தொகுதிகளில் நேருக்குநேர் மோதுகின்றன.

விடுதலை சிறுத்தைகள்- பாமக காட்டுமன்னார்கோவில், திருப்போரூர் ஆகிய 2 தொகுதிகளில் நேருக்குநேர் மோதுகின்றன.

காங்கிரஸ்- பாஜக மற்றும் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் உதகை, அறந்தாங்கி, விளவங்கோடு, கிள்ளியூர் (தமாகா- தாமரை சின்னத்தில் போட்டி), குளச்சல், ஆகிய 5 தொகுதிகளில் போட்டியிடுகின்றன.

இடது சாரி கட்சிகள்- பாஜக இடையே கந்தர்வகோட்டை. பத்மநாதபுரம், தளி, கீழ்வேலூர் ஆகிய 4 தொகுதிகளில் நேருக்குநேர் மோதுகின்றன.

விடுதலை சிறுத்தைகள்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் பெரியகுளம் தொகுதியில் போட்டியிடுகின்றன.

காங்கிரஸ்- அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் காரைக்குடி, நாங்குநேரி ஆகிய இரண்டு தொகுதிகளில் நேருக்குநேர் பலப்பரீட்சை நடத்துகின்றன.