தமிழக செய்திகள்

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறைக்கு மாற்றம்

புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் பொறுப்பேற்க உள்ள நிலையில் சந்தீப் ரத்தோர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபியாக இருந்த சந்தீப் ராய் ரத்தோர் சிறைத்துறை டிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தமிழக காவல் துறையின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்க உள்ள நிலையில் தேர்தல் கமிஷனால் நியமிக்கப்பட்டிருந்த சந்தீப் ரத்தோரை சிறைத்துறை டிஜிபியாக மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதேபோல் சிறைத்துறை டிஜிபியாக இருந்த சங்கர் அமலாக்கப்பணியக குற்ற புலனாய்வுத்துறை ஏடிஜிபியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.