தமிழ்நாடு செய்திகள்

மதுவிலக்குப் பிரிவுக்கு இயக்குனர் நியமனம்: மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம்

மதுவிலக்குப் பிரிவு இயக்குனராக கார்த்திகா நியமனம் செய்யப்பட்டுள்ளார். கள்ளச்சாராய சம்பவங்களைத் தடுக்க மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டது.

மாலை மலர்

சென்னை:

தமிழகத்தில் மேலும் 25 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

இந்து சமய அறநிலையத்துறை ஆணையராக ஸ்ரீதர் நியமனம்.

மதுவிலக்குப் பிரிவு இயக்குனராக கார்த்திகா நியமனம்.

ஜவுளித்துறை இயக்குனராக ஜெயகாந்தன் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் கள்ளச்சாராய சம்பவங்களைத் தடுக்க மதுவிலக்குப் பிரிவு இயக்குனர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே தமிழகம் முழுவதும் 10 மாவட்ட கலெக்டர்களை மாற்றம் செய்த உத்தரவிட்ட தமிழக அரசு முக்கிய துறைகளின் செயலாளர்களை மாற்றியுள்ளது.