தமிழக செய்திகள்

வாபஸ் வாங்கியது விஜய் அரசு! ரத்தன் பண்டிட் நியமனம் ரத்து!

திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

முதலமைச்சர் விஜய்யின் அரசியல் பிரிவு சிறப்பு அதிகாரியாக பிரபல ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேலை நியமித்து நேற்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது.

இவரது நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக உள்ளிட்ட அனைத்து எதிர்க்கட்சிகளும் கடும் விமர்சனங்களை முன்வைத்தன.

சட்டசபையில் இன்று பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில், இந்த விவகாரத்தைக் குறிப்பிட்டே பேசினார்.

இந்நிலையில், பலவேறு தரப்பில் இருந்து கடும் விமர்சனங்கள் எழுந்த நிலையில், ஜோதிடர் ரிக்கி ரத்தன் பண்டிட் வெற்றிவேல் நியமனத்தை தமிழக அரசு திரும்பப் பெற்றது.