தமிழக செய்திகள்

அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 X கணக்குகளை முடக்கும் முயற்சிக்கு தடை.. தமிழக அரசிடம் விளக்கம் கோரும் உயர்நீதிமன்றம்

எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழநாடு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று விஜய் தலைமையிலான தவெக கடந்த ஞாயிற்றுக்கிழமை ஆட்சிப் பொறுப்பேற்றது. இன்று சட்டமன்றத்தில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் அரசியல் பதிவுகளை வெளியிடும் 18 எக்ஸ் தள பக்கங்களை 3 மணி நேரத்திற்குள் முடக்க எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழநாடு சைபர் கிரைம் போலீசார் நோட்டீஸ் அனுப்பினர்.

அவ்வாறு முடக்கவில்லை என்றால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் நடவைடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுத்தது. இந்த எக்ஸ் பக்கங்களில் சில பிரபல அரசியல் விமர்சகர்கள் பக்கங்களும் அடக்கம்.

இது அரசுக்கு எதிரான விமர்சனங்களை ஒடுக்கும் சர்வாதிகார செயல் என அவர்கள் தரப்பில் இருந்து கண்டங்கள் எழுந்தன.

இந்நிலையில் இதை எதிரித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், அரசியல் ரீதியான கருத்துகளை பதிவிடும் எக்ஸ் கணக்குகளை முடக்க, எக்ஸ் நிறுவனத்துக்கு தமிழ்நாடு சைபர் கிரைம் போலீசார் அனுப்பிய நோட்டீஸுக்கு உயர் இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

மேலும் இந்த விவகாரத்தில் தமிழ்நாடு அரசு மற்றும் காவல்துறை பதிலளிக்கவும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.