தமிழ்நாட்டில் உள்ள மணல் குவாரிகளில் அரசு நிர்ணயித்த அளவை விட அதிக அளவில் மணல் அள்ளி சம்பாதித்ததாகவும், குவாரி ஏல போட்டியில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பரிமாற்றம் செய்ததாகவும் எழுந்த குற்றச்சாட்டில், அமலாக்கத்துறை கடந்த செப்டம்பர் மாதம் மணல் குவாரி அதிபர்களுக்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தியது. மேலும், அதிகாரிகளின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அதிகாரிகள், தொழில் அதிபர்கள் வீட்டில் கணக்கில் வராத பணம் பறிமுதல் செய்யப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், திருச்சி கலெக்டர் உள்ளிட்ட 10 மாவட்ட கலெக்டர்களுக்கு நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கும்படி அமலாக்கத்துறை சார்பில் சம்மன் அனுப்பப்ட்டிருந்தது. நீர்வளத்துறை முதன்மை பொறியாளர், நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.
இந்த நிலையில்தான் கலெக்டர்களுக்கு அனுப்பப்பட்ட சம்மனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில வழக்கு தொடரப்பட்டுள்ளது.