தமிழ்நாடு சட்டப்பேரவையின் 17வது கூட்டம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலை தொடர்ந்து அடுத்ததாக தேசிய கீதம் பாடப்பட்டது.
17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டம் தமிழ்நாட்டின் பொறுப்பு ஆளுநர் விஸ்வநாத் அர்லேகர் உரையுடன் தொடங்கியது. வணக்கம் எனக்கூறி தமிழில் உரையை தொடங்கிய ஆளுநர் அர்லேகர் ஆங்கிலத்தில் உரையாற்றினார்.
தமிழ்நாடு அரசு கொடுத்த உரையை அப்படியே மாற்றமின்றி சட்டசபையில் ஆளுநர் அர்லேகர் வாசித்தார்.
கடந்த சில ஆண்டுகளாக அரசின் உரை வாசிக்கப்படாதது பேசுபொருளான நிலையில் புதிய ஆளுநர் உரையை அப்படியே வாசித்தார்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற திருக்குறளை குறிப்பிட்டு தனது உரையை ஆளுநர் அர்லேகர் நிறைவு செய்தார். சட்டசபையின் 17-வது கூட்டத்தொடரில் 39 நிமிடங்கள் ஆளுநர் உரையாற்றினார்.