ஆளுநர் அர்லேகர் ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்பத்திரியில் நேற்று மாலை அனுமதிக்கப்பட்ட ஆளுநர் 2 நாட்கள் தங்கி சிகிச்சை பெற உள்ளதாக அவரது மனைவி தகவல் தெரிவித்துள்ளார்.
ஆளுநருடன் அவரது மனைவி மற்றும் குடும்பத்தினர் இருந்து கவனித்து வருகின்றனர்.
ஆளுநர் என்ன காரணத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் ஆளுநர் மாளிகை தரப்பிலிருந்து இன்னும் வெளியாகவில்லை.