தமிழக செய்திகள்

அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு: கவர்னர் ஒப்புதல்

ராஜகண்ணப்பன் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்து வருகிறார்.ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

சென்னை:

அமைச்சராக இருந்த பொன்முடிக்கு சொத்துக் குவிப்பு வழக்கில் 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கி சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. இதனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை இழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அமைச்சர் பதவியில் நீடிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதனால் அவர் வகித்து வந்த உயர் கல்வித்துறை வேறு அமைச்சருக்கு கூடுதலாக ஒதுக்கப்பட இருந்தது. இதற்கிடையே, அமைச்சர் ராஜ கண்ணப்பனுக்கு உயர் கல்வித்துறை கூடுதல் பொறுப்பாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், ராஜகண்ணப்பனுக்கு கூடுதல் பொறுப்பு ஒதுக்கீடு செய்துள்ளதை கவர்னர் ஆர்.என்.ரவி ஏற்றுக் கொண்டார்.

அமைச்சர் ராஜகண்ணப்பனிடம் இருந்த காதி மற்றும் கிராம தொழில்கள் வாரிய துறை அமைச்சர் காந்திக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT