தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ரூ.400 கோடி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் ஆஜர்படுத்தப்பட்டார்.
அன்பில் மகேஷை 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரிய மனு நீதிபதி சத்தியமூர்த்தி முன் விசாரணை நடைபெற்றது. தனியார் பள்ளிகள் அங்கீகாரம் குறித்து வாதம் நடைபெற்றது.
புழல் சிறையில் வைக்கப்பட்டுள்ள அன்பில் மகேஷுக்கு வீட்டு உணவு வழங்க வேண்டும். அன்பில் மகேஷ் உடல் எடை 4 கிலோ குறைந்துள்ளது என்று அவரது தரப்பு வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார்.
அன்பில் மகேசுக்கு புழல் சிறையில் வீட்டு உணவு வழங்கக்கோரிய மனு குறித்து பதில் அளிக்க அவகாசம் வேண்டும் என்று தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு கூட அவகாசமா? இவர்களது நோக்கம் அன்பில் மகேசுக்கு வீட்டு உணவு வழங்கக்கூடாது என்பது தான் என்று அன்பில் மகேஷ் தரப்பு வழக்கறிஞர் கூறினார்.
புழல் சிறையில் அன்பில் மகேசுக்கு உரிய மருத்துவ வசதி செய்து கொடுக்கப்படும் என தமிழக அரசு தரப்பு உறுதி அளித்தது.
அன்பில் மகேசுக்கு புழல் சிறையில் வீட்டு உணவு வழங்குவது குறித்து பின்னர் உத்தரவு பிறப்பிக்கப்படும் என்று நீதிபதி கூறினார்.
அன்பில் மகேஷை வழக்கறிஞர் 5 பேர் மட்டும் 10 நிமிடங்கள் சந்திக்க சென்னை சிறப்பு நீதிமன்றம் அனுமதி வழங்கி உள்ளது.