மு.க. ஸ்டாலின்
தமிழக செய்திகள்

முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்ட இசட் பிரிவு பாதுகாப்பு வாபஸ்

ஒரு எஸ்.ஐ. தலைமையில் தமிழக போலீசார் 4 பேர் மட்டுமே பாதுகாப்பு அளிப்பர்.

முன்னாள் முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு திரும்பப் பெறப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க. ஸ்டாலினுக்கு இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்த நிலையில், த.வெ.க. ஆட்சி மாறியதும் இசட் பிரிவு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மு.க. ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டிருந்த இசட் பிரிவு பாதுகாப்பு, இன்று முதல் எஸ்கார்ட் பாதுகாப்பாகக் குறைக்கப்பட்டுள்ளது. அ.தி.மு.க. பொதுச்செயலாளரும் முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிசாமிக்கும் இதே எஸ்கார்ட் பாதுகாப்புதான் வழங்கப்பட்டிருக்கிறது.

இசட் பிளஸ் பிரிவில் ஒரு நாளில் சுழற்சி முறையில் 58 காவலர்களும், இசட் பிரிவில் 33 காவலர்களும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்படுவர். ஆனால், எஸ்கார்ட் பாதுகாப்பில் ஒரு உதவி ஆய்வாளர் தலைமையில் 4 காவலர்கள் மட்டுமே இருப்பர்.