தமிழக செய்திகள்

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை வெளியிட்டார் நிதி அமைச்சர் மரிய வில்சன்

தமிழக சட்டசபை நாளை மறுநாள் கூடுகிறது.

தமிழ்நாட்டின் நிதி நிலை குறித்த வெள்ளை அறிக்கையை நிதித்துறை அமைச்சர் மரிய வில்சன் இன்று வெளியிட்டார்.

சென்னை தலைமை செயலகத்தில் மாலை 5.30 மணிக்கு அமைச்சர் மரிய வில்சன் வெள்ளை அறிக்கையை வெளியிட்டார்.

நாளை மறுநாள் சட்டசபை கூட உள்ள நிலையில் இன்று வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டின் நிதி வருவாய் மற்றும் கடன் குறித்து அறிக்கையில் தகவல் வெளியானது.

முன்னதாக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக விஜய் பதவியேற்றபோது நிதி நிலை குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும் என கூறியிருந்த நிலையில் வெள்ளை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.