தமிழக செய்திகள்

TN EXIT POLL | தமிழகத்தில் த.வெ.க ஆட்சி அமைக்கும்..!- AXIS MY INDIA கணிப்பு

திமுக மற்றும் தவெக தலா 35 சதவீத வாக்குகள் பெறும் என கணித்துள்ளது.

தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், கேரளா, மேற்கு வங்காளம் உள்ளிட்ட 5 மாநில சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நிறைவடைந்தன. பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்படுகின்றன.

தமிழகத்தில் இம்முறை திமுக கூட்டணி, அதிமுக தலைமையிலான என்டிஏ கூட்டணி, தவெக, நாம் தமிழர் கட்சி என 4 முனைப்போட்டி நடக்கிறது.

இதில், வெற்றிப்பெறபோவது யார் என வாக்கு எண்ணிக்கை அன்று அதிகாரப்பூர்வமாக தெரியவரும்.

இந்நிலையில், பல்வேறு நிறுவனங்கள் தரப்பில் எடுக்கப்பட்ட தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளன.

பெரும்பாலான கருத்து கணிப்புகள் திமுக ஆட்சியை தக்க வைக்கும் என கணித்துள்ளது.

ஆனால், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் தவெக வெற்றி பெற்று ஆட்சியமைக்கும் என AXIS MY INDIA கணித்துள்ளது.

இதில், திமுக மற்றும் தவெக தலா 35 சதவீத வாக்குகள் பெறும் என கணித்துள்ளது.

AXIS MY INDIA (INDIA TODAY)

திமுக கூட்டணி - 92 - 110 தொகுதிகள்

அதிமுக கூட்டணி - 22 - 32 தொகுதிகள்

தவெக - 98 - 120 தொகுதிகள்