தமிழ் நாட்டில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் கடைசிக்கட்ட வாக்கு சேகரிப்பில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அரசியல் தலைவர்கள் மாநிலம் முழுக்க சுற்றுப் பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று திருவள்ளூர் மாவட்டத்தில் வாக்கு சேகரித்தார். இதைத் தொடர்ந்து இன்று மதியம் 12 மணி முதல், பாலவாக்கம் அம்பேத்கர் சிலை, திருவான்மியூர் நாகாத்தம்மன் கோவில் சந்திப்பு, சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் அண்ணா சாலை கலைஞர் வளைவு - ஜூனிஸ் சாலை சந்திப்பு ஆகியவற்றின் வழியாக த.வெ.க. தலைவர் விஜய் வாகன பிரசாரம் மேற்கொள்கிறார்.
இதைத் தொடர்ந்து பிற்பகல் 3 மணிக்கு, சைதாப்பேட்டை நந்தனம் YMCA மைதானத்தில் விஜய் கலந்து கொள்ளும் கழக நிர்வாகிகள் கூட்டம் நடைபெறுகிறது. நிர்வாகிகள் கூட்டத்திற்கு, QR கோடு அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டுள்ள 5000 நபர்கள் மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று த.வெ.க. தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.