தமிழக செய்திகள்

TN Elections 2026 | தமிழ்நாடு தேர்தல் 2026 வாக்கு எண்ணிக்கை... அதிரடி கட்டுப்பாடுகள்!

வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 24-ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தது. வாக்குப் பதிவைத் தொடர்ந்து வாக்குகளை எண்ணும் பணிகள் நாளை (மே 04) நடைபெறுகிறது.

தமிழகத்தில் இந்த தேர்தலில் யார் வெற்றி பெறுவார்கள் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மையங்களில் பலத்த பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், நாளை வாக்கு எண்ணும் மையத்திற்குள் பேனா மற்றும் பென்சில் கொண்டு செல்ல அனுமதி மறுக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்பாளர் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும்.

வாக்கு எண்ணும் மையத்திற்கு 17C படிவம், நோட் பேட், எழுதும் நோட்டு புத்தகங்களுக்கு மட்டுமே அனுமதியளிக்கப்பட்டு உள்ளது. செல்போன், கால்குலேட்டர் , ப்ளூடூத் இயர் போன், ஸ்மார்ட் வாட்ச் மற்றும் சிகரெட், மது, இ-சிகரெட் உள்ளிட்ட பொருட்களை எடுத்து செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

வாக்கு எண்ணும் மையத்திற்கு வரும் முகவர்கள் அனைவரும் கட்டுப்பாடுகளை தவறாது கடைப்பிடிக்க வேண்டும் என கோவை மாநகர காவல் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.