தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது. வாக்குப்பதிவுக்கு இன்னும் இரண்டு வாரங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன.
2026 தமிழ்நாடு சட்டசபை தேர்தலில் நடிகராக இருந்து தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சி தொடங்கி இருக்கும் விஜய் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறார்.
விஜய்யின் அரசியல் வருகை காரணமாக தமிழ்நாடு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது. தேர்தலை ஒட்டி மற்ற கட்சி தலைவர்களை போன்றே த.வெ.க. தலைவர் விஜய் தமிழகம் முழுக்க சுற்றுப் பயணம் செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பலமுறை பிரசார திட்டத்தை ரத்து செய்துள்ள நிலையில், த.வெக. தலவைர் விஜய் இன்று மதியம் காரைக்குடியில் தேர்தல் பிரசாரம் செய்கிறார்.
சிவகங்கை மாவட்டம், காரைக்குடியில், காரைக்குடி டவுன், கண்ணதாசன் மணி மண்டபம் அருகே நண்பகல் 12.00 மணி முதல் 2.30 மணி வரை த.வெ.க. தலைவர் விஜய் தேர்தல் பிரசாரம் செய்ய இருக்கிறார். இதற்காக தேர்தல் ஆணையம் அனுமதி பெறப்பட்டு பிரசாரத்திற்கு தேவையான அடிப்படை வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.