தமிழக செய்திகள்

TVK Vijay | 3 தொகுதிகளில் இன்று பிரசாரம்... சென்னையில் வலம் வந்து வாக்கு சேகரிக்கும் விஜய்

விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி.

தமிழ்நாட்டில் வருகிற 23-ஆம் தேதி சட்டமன்ற தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து மே மாதம் 04-ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தேர்தலை ஒட்டி அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளன. 2026 சட்டமன்ற தேர்தலின் மூலம் முதல் முறையாக தேர்தல் களமிறங்கும் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் மீது தனி கவனம் இருக்கிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் த.வெ.க. தலைவர் விஜய் சுற்றுப் பயணம் மேற்கொண்டு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

அந்த வகையில், த.வெ.க. தலைவர் விஜய் நேற்று திருப்பூரில் பிரசாரம் மேற்கொண்டார். இதைத் தொடர்ந்து அவர், இன்று (ஏப்ரல் 15) சென்னை தியாகராயநகர், ஆயிரம் விளக்கு மற்றும் எழும்பூர் (தனி) என மூன்று தொகுதிகளில் பிரசாரம் மேற்கொள்கிறார்.

த.வெ.க. தலைவர் விஜய்யின் தேர்தல் பிரசாரத்துக்கு நிபந்தனைகளுடன் தேர்தல் ஆணையம் அனுமதி வழங்கி உள்ளது.