தமிழக செய்திகள்

TN Elections 2026: தி.மு.க. கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கீடு

தி.மு.க. மற்றும் தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்டது.

மாலை மலர்

தமிழ் நாடு சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன. அரசியல் கட்சிகள் கூட்டணி பேச்சுவார்த்தையின் இறுதிக்கட்டத்திலும், தொகுதி பங்கீட்டு பணிகளிலும் தீவிரம் காட்டி வருகின்றன.

அந்த வரிசையில், தி.மு.க. கூட்டணியில் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகிறது.

இதுவரை தி.மு.க. கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கு 28 தொகுதிகளும், ம.தி.மு.க. கட்சிக்கு 04 தொகுதிகளும், சி.பி.ஐ. கட்சிக்கு 05 தொகுதிகளும், சி.பி.எம். கட்சிக்கு 05 தொகுதிகளும், வி.சி.க. கட்சிக்கு 8 தொகுதிகளும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

இந்த வரிசையில் தே.மு.க. கட்சிக்கு தி.மு.க. கூட்டணியில் 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தி.மு.க. - தே.மு.தி.க. இடையே தொகுதி பங்கீட்டில் உடன்பாடு எட்டப்பட்ட நிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

ஒப்பந்தத்தில் தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மற்றும் தே.மு.தி.க. பொதுச் செயலாளர் பிரேமலதா ஆகியோர் கையெழுத்திட்டனர்.