தி.மு.க. கூட்டணியில் தேசிய முற்போக்கு கூட்டணிக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இதற்கான ஒப்பந்தம் மு.க. ஸ்டாலின்- பிரேமலதா விஜயகாந்த் முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.
திமுக- தேமுதிக இடையிலான தொகுதி பங்கீடு உடன்பாடு இன்று இரவு எட்டப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* திமுக கூட்டணி நிச்சயமாக தமிழ்நாட்டுக்கு பல்வேறு திட்டங்களை தேர்தல் அறிக்கையில் மூலம் தெரிவிக்க இருக்கிறது.
* வெகு விரைவில் வேட்பாளர்கள் பட்டியல் அறிவிக்கப்பட்டு, வேட்புமனு தாக்கல் செய்து தொகுதிகளில் மக்களை சந்திப்போம்.
* எந்தெந்த தொகுதிகள் என்பது முடிவு செய்ய 5 பேர் கொண்ட பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்படும்.
* 27-ந்தேதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டு, ஏப்ரல் 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யப்படும். தேமுதிக-வும் ஏப்ரல் 1-ந்தேதி வேட்புமனு தாக்கல் செய்யும். கூட்டணி தர்மத்துடன் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளின் வேட்பாளர்களும் வெற்று பெறும் வகையில் தேமுதிக உழைக்கும.
உத்தேச பட்டியலை நாங்கள் வழங்கியிருக்கிறோம்.