தமிழக சட்டசபைக்கு அடுத்த மாதம் 23-ந்தேதி தேர்தல் நடைபெறுகிறது. நேற்று முன்தினம் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட உடனே தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவுகிறது.
விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் இத்தேர்தலில் பல்வேறு மாற்றங்களை கொண்டு வரும் என கருதப்பட்டதால் அக்கட்சி மீதே பலரது கவனமும் இருக்கிறது.
இந்நிலையில், சட்டமன்ற தேர்தலை ஒட்டி சிந்தாதிரிபேட்டை தொகுதியில் மக்களின் மனநிலை எப்படி உள்ளது என்று அறிய ஜாலியாக ஒரு vox pops நடத்தினோம்.
43 பேரிடம் நீங்கள் யாருக்கு ஓட்டு போடுவீர்கள் என்று கேட்கப்பட்ட கேள்விக்கு அதிகபட்சமாக தவெகவிற்கு 21 பேர் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். அதற்கு அடுத்தபடியாக திமுகவிற்கு 18 பேரும் அதிமுகவிற்கு 4 பேரும் வாக்களிப்போம் என்று தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிப்போம் என்று யாரும் தெரிவிக்கவில்லை.
இது மக்களின் மனநிலையை அறிய ஜாலியாக எடுக்கப்பட்ட ஒரு vox pops தான். ஆதலால் மக்களின் ஆதரவு யாருக்கு பெரும்பான்மையாக இருக்கிறது என்பது மே 4 ஆம் தேதி வெளியாகும் தேர்தல் முடிவுகளில் தான் நமக்கு தெரியவரும்.
தற்போது சிந்தாதிரிபேட்டை பகுதி உள்ள சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.