தமிழக செய்திகள்

TN Election Results | த.வெ.க.வுக்கு ஏமாற்றம் அளித்த கன்னியாகுமரி மாவட்டம்

கன்னியாகுமரி தொகுதியில் உள்ள 6 தொகுதிகளில் ஒரு தொகுதியில் கூட த.வெ.க. வெற்றி பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. த.வெ.க. தொடக்கத்தில் இருந்தே முன்னிலை வகித்து வருகிறது. வெற்றி, முன்னிலை என 109 இடங்களில் பிடிக்கும் நிலையில் உள்ளது.

எல்லா இடங்களிலும் த.வெ.க. முத்திரை பதித்துள்ளது. ஆனால் கன்னியாகுமரி மாவட்டம் த.வெ.க.வுக்கு ஏமாற்றம் அளித்துள்ளது. 6 தொகுதியில் ஒன்றைக் கூட கைப்பற்ற முடியவில்லை.

1. கன்னியாகுமரி தொகுதியில் அதிமுக வேட்பாளர் தளவாய் சுந்தர் திமுக வேட்பாளரை விட 3894 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். த.வெ.க. 3-வது இடத்தில் உள்ளது.

2. நாகர்கோவில் தொகுதியில் திமுக வேட்பாளர் ஆஸ்டின் 7570 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். தவெக 2-வது இடம் வகிக்கிறது.

3. குளச்சல் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் 2435 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். த.வெ.க. 2-வது இடம் பிடித்துள்ளது.

4. விளவன்கோடு தொகுதியில் காங்கிரஸ் 20762 வாக்குகள் முன்னிலைப் பெற்றுள்ளது. த.வெ.க. 2-வது இடத்தில் உள்ளது.

5. பத்மநாபபுரம் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு வேட்பாளர் செல்லசாமி 15569 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். த.வெ.க. 2-வது இடத்தில் உள்ளது.

6. கிள்ளியூர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ராஜேஷ் குமார் 3285 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார். த.வெ.க. 2-வது இடத்தில் உள்ளது.