சென்னை ஆழ்வார்பேட்டையில் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே. வாசன் தனது வாக்கை பதிவு செய்தார்.
பா.ஜ.க. மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பொதுமக்களுடன் வரிசையில் நின்று தனது வாக்கினை செலுத்தினார்.
திருப்பூர் மாவட்டம் உடுமலை நகராட்சி உட்பட்ட 5 வது வார்டு நகராட்சி துவக்கப்பள்ளியில் இன்று உடுமலை அதிமுக வேட்பாளர் முன்னாள் அமைச்சர் உடுமலை கே. ராதாகிருஷ்ணன் குடும்பத்துடன் வரிசையில் நின்று தனது வாக்கினை பதிவு செய்தார். பிறகு செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில்,
தமிழக முழுவதும் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். அதிமுக ஆட்சி காலத்தில் பல்வேறு நலத்திட்டங்களால் ஏழை எளிய மக்கள் பயன்பெற்ற காரணத்தால் தற்போது தமிழக முழுவதும் அலை வீசிக் கொண்டுள்ளது. கொங்கு மண்டலத்தில் 27 சட்டமன்ற தொகுதிகளில் அதிமுக வெற்றி பெறும் என்றார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்கு செலுத்தினார் நடிகர் தனுஷ்.
நடிகர் சிவக்குமார் தனது மனைவியுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார். இதன்பின் செய்தியாளர்கள் அவர் கூறுகையில், எந்தக் கட்சி ஆட்சி அமைத்தாலும், மதுவை ஒழிப்பதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார்.
ஈரோடு மாவட்டத்தில் இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடந்து வருகிறது. மாவட்டம் முழுவதும் 8 சட்டமன்ற தொகுதிகளில் பொதுமக்கள் வாக்களிக்கும் வகையில் 2379 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டு இருந்தன.
காலை 7 மணி முதலே பொதுமக்கள் குறிப்பாக பெண்கள் வரிசையில் நின்று ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர். மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருவதால் காலை நேரத்திலேயே சீக்கிரமாக சென்றுவாக்கை பதிவு செய்து கொள்ளலாம் என்ற ஆர்வத்தில் ஏராளமானோர் வந்திருந்தனர். இதனால் மாவட்டத்தில் வாக்கு சதவீதம் உயர்ந்தது.
ஈரோடு மாவட்டத்தில் பதிவாகும் வாக்கு சதவீதத்தை 2 மணி நேரத்துக்கு ஒரு முறை அதற்காக இந்திய தேர்தல் ஆணையம் அமைத்துள்ள செயலி மூலம் தெரிந்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
அதன்படி ஈரோடு மாவட்டத்தில் காலை 9 மணி நேர நிலவரப்படி மாவட்டம் முழுவதும் 8 தொகுதிகளையும் சேர்த்து 19.38 சதவீதம் வாக்குப்பதிவாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தவறாது வாக்களியுங்கள்!- மு.க.ஸ்டாலின்
சொந்த ஊருக்கு செல்லும் வாக்காளர்கள் வாக்கு செலுத்தாமல் ஏமாறும் நிலை கூடாது.
மக்கள் சிரமமின்றி தங்களது வாக்குகளை முழுமையாக செலுத்த தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்ய வேண்டும்- த.வெ.க. தலைவர் விஜய்
TN Assembly Election| காலை 9 மணி நிலவரப்படி 17.69 சதவீதம் வாக்குப்பதிவு
சென்னை கொட்டிவாக்கத்தில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி ராதிகாவுடன் தனது வாக்கை பதிவு செய்தார் நடிகரும், பாஜக நிர்வாகியுமான சரத்குமார்.
தனது குடும்பத்துடன் வந்து வாக்கு செலுத்திய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்.
இயக்குனர் அட்லீ தனது வாக்கினை பதிவு செய்தார்.
தமிழ்நாட்டில் உள்ள வாக்காளர்கள் தங்களது ஜனநாயக கடமையை ஆற்ற வேண்டும். தமிழ்நாடு வெல்லும் என வாக்களித்த பின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
சென்னை தேனாம்பேட்டை சித்தரஞ்சன் சாலையில் அமைந்துள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது குடும்பத்துடன் வந்து ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
சென்னை ஆயிரம்விளக்கு தொகுதிக்கு உட்பட்ட ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரி வாக்குச்சாவடியில் நடிகர் ரஜினிகாந்த் தனது மகளுடன் வந்து வாக்கினை பதிவு செய்தார்.
மதுரை கிழக்கில் உள்ள வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் நடிகரும் இயக்குனருமான சசிகுமார்.
தி.மு.க. தலைமையிலான கூட்டணி 200 தொகுதிகளுக்கு மேல் வெல்லும்- பிரேமலதா
தமிழக அரசியலில் களமிறங்கி உள்ள தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை தி.நகர் தொகுதிக்குட்பட்ட வாக்குச்சாவடியில் குடும்பத்துடன் தனது வாக்கினை செலுத்தினார் பா.ம.க. தலைவர் அன்புமணி.
நடிகர் சிவகார்த்திகேயன் தனது மனைவி ஆர்த்தியுடன் சென்று வாக்களித்தார்.
மக்கள் நீதி மய்யத் தலைவரும் நடிகருமான கமல்ஹாசன் தனது மகள் ஸ்ருதிஹாசனுடன் வந்து தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றினார்.
நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வாக்கினை செலுத்தினார்.
சென்னை ராயபுரம் தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் ஜெயக்குமார் தனது வாக்கினை செலுத்தினார்
சென்னை சாலிகிராமம் ஜவஹர் குளோபல் பள்ளியில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் வாக்களித்தார்.
யாருக்கு வாக்களித்தோம் என்பதை பொதுவெளியில் தெரிவிப்பது தண்டனைக்குரிய குற்றம்- தேர்தல் ஆணையம்
நீலாங்கரையில் உள்ள மாநகராட்சி பள்ளி வாக்குச்சாவடியில் வாக்களிப்பதற்காக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் தனது வீட்டில் இருந்து புறப்பட்டார்.
இன்று தமிழ்நாட்டுக்கு தனது விதியை மாற்றிக்கொள்ள ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. தகுதி பெற்ற வாக்காளர்கள் அனைவரும் பெருமளவில் திரண்டு வந்து, தங்கள் வாக்குகளைப் பதிவு செய்யுமாறு நான் கேட்டுக்கொள்கிறேன்.
ஒவ்வொரு வாக்கிற்கும் தமிழ்நாட்டின் பிரகாசமான மற்றும் மேம்பட்ட எதிர்காலத்தை உருவாக்கும் வலிமை உண்டு. உங்கள் வாக்கை மதிப்புமிக்கதாக்குங்கள்!
தமிழ்நாட்டின் அன்புச் சகோதர சகோதரிகளே,
இன்றைய போராட்டம் உங்கள் உரிமைகளைப் பாதுகாப்பதற்கானது. இப்போராட்டம் கூட்டாட்சித் தத்துவம், பகுத்தறிவு, சமத்துவம், நீதி மற்றும் சுதந்திரம் ஆகியவற்றைக் காப்பதற்கானது.
மேலும், இது அனைவரையும் உள்ளடக்கிய நலவாழ்வை உறுதி செய்யவும், உங்கள் முன்னோடித் தலைவர்கள் போற்றிய சமூக நீதிக் கோட்பாடுகளைத் தக்கவைத்துக் கொள்ளவும் ஆனதாகும்.
உங்கள் கூட்டாட்சி உரிமைகளைப் பறிக்க முயல்பவர்களுக்கு எதிராக நீங்கள் உறுதியாக நின்று, உங்கள் ஜனநாயக உரிமையைப் பயன்படுத்த வேண்டிய தருணம் இதுவே.
குறிப்பாக, முதன்முறையாக வாக்களிக்கும் இளம் வாக்காளர்கள் பெருந்திரளாக முன்வந்து, தமிழ்நாட்டின் எதிர்காலத்திற்காக வாக்களிக்குமாறு நான் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறேன்.
சென்னை தாமோதரபுரம் நடுநிலைப்பள்ளி வாக்குச்சாவடியில் தனது வாக்கினை பதிவு செய்தார் டி.டி.வி. தினகரன்.
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்று வரும் வேளையில், ஜனநாயகத்தின் இப்புனிதக் கடமையில் அனைவரும் மிகுந்த உற்சாகத்துடன் பங்கேற்குமாறு வாக்காளர்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்கிறேன். குறிப்பாக, தமிழக இளைஞர்களும் பெண்களும் பெருமளவில் திரண்டு வந்து, சாதனை அளவிலான எண்ணிக்கையில் வாக்களிக்குமாறு நான் வலியுறுத்துகிறேன்.
சென்னை கோயம்பேட்டில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய இணையமைச்சர் எல்.முருகன் தனது வாக்கினை பதிவு செய்தார்.
கோவையில் வாக்காளர்களை வரவேற்கும் ரோபா.
100 சதவீதம் நம்பிக்கை உள்ளது.. வெற்றி உறுதி - எடப்பாடி பழனிசாமி பேட்டி
மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை மக்கள் மீண்டும் வெற்றி பெறச் செய்வார்கள்- ப. சிதம்பரம்
திமுக அமோக வெற்றி பெற்று இரண்டாவது முறையாக ஸ்டாலின் ஆட்சி அமைப்பார்- அமைச்சர் ரகுபதி
அமைச்சர் கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார்.
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்களித்தார்.
பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் வாக்கு செலுத்தினார்.
ஸ்டெல்லா மேரிஸில் அமைக்கப்பட்டிருந்த வாக்குச்சவாடியில் நடிகர் கவுதம் கார்த்திக் வாக்கு செலுத்தினார்.
நடிகை குஷ்பூ, சுந்தர்.சி தங்களது மகளுடன் வரிசையில் நின்று வாக்கு செலுத்தினர்
நீலாங்கரையில் நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
காரைக்குடியில் முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் வாக்களித்தார்.