தமிழ் நாடு சட்டமன்றத்திற்கு அடுத்த மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தமிழ் நாட்டில் சட்டசபை தேர்தலுக்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அரசியல் கட்சிகள் தேர்தலுக்கு மும்முரமாக ஆயத்தமாகி வருகின்றன.
தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான கூட்டணி, அ.தி.மு.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி, நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என்ற நான்கு முனை போட்டி நிலவி வந்தது. இந்த நிலையில், வருகிற சட்டமன்ற தேர்தலில் 234 தொகுதிகளிலும் சசிகலாவுடன் இணைந்து போட்டியிட உள்ளதாக பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அறிவித்துள்ளார்.
மேலும், தங்கள் கூட்டணியில் உறுதியாக இருக்கும் கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரலாம் என்று பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். அனைத்திந்திய புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்ற கழக பொதுச் செயலாளர் சசிகலா மற்றும் பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் இடையே கூட்டணி ஒப்பந்தம் கையெழுத்தானது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட உள்ளதாக அறிவிப்பு. மேலும், இது தொடர்பான ஒப்பந்தத்தில் இருவரும் கையெழுத்திட்டனர். ஏற்கனவே தமிழக சட்டமன்ற தேர்தலில் நான்கு முனை போட்டி நிலவி வந்த நிலையில், தற்போது இந்த அறிவிப்பை தொடர்ந்து தமிழக சட்டமன்ற தேர்தல் களத்தில் ஐந்து போட்டி ஏற்பட்டுள்ளது.