தமிழகத்தில் 234 தொகுதிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. திருச்சி மேற்கு தொதிக்கு உட்பட்ட தில்லை நகர் மக்கள் மன்றத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களிக்க அமைச்சர் கே.என். நேரு காலையிலேயே வந்தார்.
அந்த வாக்குச்சாவடியில் உள்ள இயந்திரத்தில் திடீர் கோளாறு ஏற்பட்டது. இதனால் வாக்குப்பதிவு நடைபெறாமல் உள்ளது. இதனால் கே.என். நேரு வாக்களிப்பதற்காக காத்திருக்கிறார்.
வாக்கு அளித்ததற்கான பட்டனை அழுத்திய உடன் பச்சை பட்டன் எரியும். ஆனால் தொடர்ந்து சிகப்பு பட்டன் எரிவதால் அதிகாரிகள் சரி செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பின்னர் இயந்திரம் சரி செய்யப்பட்ட பின் அமைச்சர் கே.என். நேரு தனது வாக்கை பதிவு செய்தார்.