தமிழக செய்திகள்

தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை - அமைச்சர் அன்பில் மகேஷ்

மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

மாலை மலர்

தேசிய கல்விக்கொள்கை தொடர்பாக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானுக்கு அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார். அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

* தமிழகத்தில் 1.09 கோடி மாணவர்கள் மாநில வாரிய பள்ளிகளில் பயின்று வருகின்றனர்.

* மொத்தம் 1,635 சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் 15.2 லட்சம் மாணவர்கள் மட்டுமே படித்து வருகின்றனர்.

* மும்மொழி கொள்கையை விடவும் சிறப்பான இருமொழிக் கொள்கையை ஏன் உடைக்க பார்க்கிறீர்கள்.

* மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதை முடிவு செய்வதில் தமிழ்நாடு அரசு ஒருபோதும் சமரசம் செய்யாது.

* தமிழ்நாட்டில் கல்விமுறை சிறந்தது என பலமுறை நிரூபிக்கப்பட்டுள்ள நிலையில் அதை ஏன் மாற்ற வேண்டும்?

* தமிழ் என்பது வெறும் ஒரு மொழி மட்டுமல்ல - அது நமது வேர்கள், வரலாறு மற்றும் மதிப்புகளுடன் தொடர்புடையது.

* நமது மாணவர்கள் ஏற்கனவே வலுவான இருமொழி அடித்தளத்துடன் சிறந்து விளங்கும்போது, தமிழ்நாட்டிற்கு கட்டாய மூன்றாம் மொழி தேவையில்லை.

* இது மொழி பற்றியது மட்டுமல்ல - முடிவுகளை வழங்கும் கல்வி முறையைப் பாதுகாப்பது பற்றியது.

* NEP-ஐ விட சிறப்பாக செயல்படும் ஒரு அமைப்பை ஏன் சீர்குலைக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Hon. Union Minister @dpradhanbjp avargalDon't Fix What Isn't Broken: Tamil Nadu's Education System Delivers, NEP Disrupts! The attack on Tamil Nadu's stand on NEP and the language issue is not only misleading—it completely ignores the bigger picture. This is not just about…