பெண்களின் பாதுகாப்பை மேம்படுத்தும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையை முதலமைச்சர் விஜய் இன்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:
சிங்கப்பெண் சிறப்பு படையை தொடங்கி வைக்கும் நிகழ்வு மனசுக்கு நிறைவானது.
ஆட்சிக்கு வந்த குறைந்த தினங்களில் இந்தத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி உள்ளோம்.
பெண்களுக்கு எதிரான கொடுமைகளை சிறிதளவு கூட சகித்துக் கொள்ள முடியாது.
இந்தத் திட்டத்துக்காக ரூ.354 கோடிக்கும் மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக இத்திட்டத்தின் மூலம் 2,500 புதிய பணியிடங்கள் உருவாக்கப்பட உள்ளது.
பெண்கள் பாதுகாப்புக்காக டிரோன் மூலமாக கண்காணிக்கும் பணி அறிமுகம் செய்யப்படுகிறது என தெரிவித்தார்.